காபி பிரேக்கில் என் நண்பர்கள் தங்கத்தின் விலையேற்றத்தைப் பார்த்துப் பரவசமானார்கள். என்ன ஒரு பைத்தியக்காரத்தனம்! அதுதான் செல்வம், அதுதான் நம் கடனை அடைத்துவிடும் என்று நம்புகிறார்கள். நுகர்வுக்கு வாங்கிப் போட்ட கடனை அடைக்க, மீண்டும் நுகர்வைத் தூண்டுகிற தங்கமா?
ஆனால், தங்கம் அசையுமா? அசையாது. அது லாக்கரில் ஒரு டம்மி பீஸாகக் கிடக்கும். கல்யாணம், வாரிசு என்று மரபின் சடங்குப் பூட்டுக்குள் போய்விடுகிறது. எந்த நெருக்கடி வந்தாலும், மனைவி அதை அடகு வைக்கச் சம்மதிக்கவே மாட்டாள். மாதம் தவறாமல் நகைக் கடைக்காரனுக்குச் சீட்டுப் பணத்தைக் கட்டுகிறார்கள்—சுதந்திரத்துக்குப் போடும் முதலீடல்ல அது; வெறும் அலங்காரத்துக்கான டெபாசிட்.
மனைவிக்கு மோதிரம். காதலிக்கு கொலுசு. மகளுக்கு வளையல். எப்போதும் ஒரே சடங்கு. ஒரு கட்டாயம். அவ்வளவுதான்.
கடைசியில் என்ன ஆகும்?
லவ்-ஆ? கடமையா? இன்னொரு லூப்-பா? அர்த்தம் என்று தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட சடங்கு, பழகிப்போன வழக்கங்களின் பெரிய இயந்திரத்தில் மாட்டிக்கொண்ட ஒரு கயிறு.
பெரும்பாலானோரின் வாழ்க்கை ஒரு திட்டத்துடன் தொடங்குவதில்லை. போட்டியுடன் தொடங்குகிறது. மற்றவர்களைவிட நாம் குறைந்தவர்களா என்ன? ஒரு பார்வை. ஒரு ராத்திரி. ஒரு சடங்கு. ஒரு குழந்தை. ஸ்கிரிப்ட் ரெடி. மறுபடியும் ஓடுகிறது.
குழந்தைகள் எப்போதுமே அன்பின் பரிசாகப் பிறப்பதில்லை. சிலசமயம் சலிப்பு, காமம், அல்லது பரம்பரை சோம்பேறித்தனத்தின் அவுட்கம் (Outcome). இந்த ஆர்க்கிடெக்ச்சர் (Architecture) ஏன் என்று கேட்பதில்லை. இன்னும் அதிகம்தான் கேட்கும்.
அதிக உடல்கள். அதிக வாய்கள். அதிக மூவ்மென்ட். அதிக நுகர்வு. பிறப்பிலிருந்தே நாம் தேராத தாளத்துக்குள் தள்ளப்படுகிறோம். ஸ்கூல் ஒபீடியன்ஸ் (Obedience) கற்றுத்தரும். வேலை அசட்டுத் துணிச்சலைக் கற்றுத்தரும். கல்யாணம் கண்மூடித்தனத்தைப் பாராட்டும். குழந்தை பெறுவது கடமை என்று வேஷம் போடுகிறது. மரபின் ஒத்திசைவுக்குள் எல்லோரையும் இழுக்கும் இறுதி லூப் இது.
ஒவ்வொரு ஸ்டெப்பும் அடுத்ததற்குத் தீனி போடும். அந்த அடுத்தது சிஸ்டத்துக்குத் தீனி போடும். நாம் உயிர்ப்புடன் இருக்கிறோம் என்று உணர நுகர்கிறோம். நம்ம டோபமைன், செரோடோனினுக்கு ஃபுட் போடுகிறோம். முன்னேறுவதாகப் பில்டப் கொடுக்கிறோம். ஒரு பெரிய மிஷன் நம் கையில் இருப்பதாக நினைக்கிறோம். நம்மைச் சுற்றியுள்ளவர்களைவிட நாம் பெட்டர் என்று திருப்திப்படுகிறோம்.
இது சக்கரம் இல்லை—ஒரு லூப். அமைதியானது. கொடூரமானது. நல்ல இலாபம் கொட்டுகிறது.
இந்த லூப் எகானமி (Loop Economy) பிரில்லியன்ஸால் (Brilliance) செழிப்பதில்லை. வால்யூமால் செழிக்கும். இதற்கு விஷன் தேவையில்லை. பெருக்கம் போதும். எத்தனை குழந்தைகள் பிறக்கின்றனவோ, அத்தனை கஸ்டமர்கள் ரெடி. கஸ்டமர்கள் கூடினால், லாபம் கூடும்.
இங்கே நோக்கம் என்பது ஒரு அழைப்பல்ல. ஒரு செயின் (Chain).
அந்த வடமாநிலத் தொழிலாளியைக் கேளுங்கள். அவன் ஏன் கல்யாணம் செய்ய வேண்டும் என்று யோசிக்க மாட்டான். தான் கொண்டுவரும் வாய்களுக்கு உணவளிக்க முடியுமா என்று கவலைப்பட மாட்டான். ரிசர்ச் செய்ய அவன் ஊரைவிட்டு வரவில்லை, உயிர்வாழ வருகிறான். தான் ஒருபோதும் வசிக்காத அடுக்குமாடிகளைக் கட்டுகிறான். உள்ளே நுழைய முடியாத வீட்டுக்கு டைல்ஸ் போடுகிறான்.
அவனுடைய அறியாமை இந்த லூப்புக்கு ஆக்ஸிஜன். மரபா? அப்படியெதுவும் இல்லை. அவன் வடிவமைக்காத லூப்பைத் தாங்க, அவனது உடல் உடையும்போது, அவன் பிள்ளைகள் டீசல் புகையை சுவாசித்து வளர்கிறார்கள்.
இது தியாகம் இல்லை. இது ஒரு ஸ்ட்ரக்ச்சர் (Structure)—ஒத்திசைவின் பெருக்கத்தால் அறியாமையைப் பரப்பும் ஸ்ட்ரக்ச்சர்.
படித்தவர்களும் தப்பவில்லை. "இதுதான் டைம்" என்பதால் மணக்கிறார்கள். "எக்ஸ்பெக்ட் பண்றாங்க" என்பதால் குழந்தைப் பெறுகிறார்கள். கடல்களை விஷமாக்கி, வானத்தை நாசமாக்கும் வேலைகளைச் செய்து, அதை "கரியர் க்ரோத்" என்கிறார்கள்.
பிள்ளைகளை வளர்ப்பது பெற்றோர்கள் அல்ல, ஸ்கிரீன்கள். பள்ளிச் சிஸ்டம் அதே லூப்பை ரெப்ளிகேட் செய்ய டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. போட்டோக்கள் செலக்ட் செய்யப்படுகின்றன, பிறந்தநாள் பார்ட்டிகள் நடத்தப்படுகின்றன—"ஆசீர்வாதம்," "மரபு" என்று கேப்ஷன் போடுகிறார்கள்; இதற்கிடையே, கட்டமைப்பு அமைதியாக ஒவ்வொரு டயப்பரிலிருந்தும், டியூஷன் ஃபீஸிலிருந்தும், பொம்மையிலிருந்தும் பணத்தை உறிஞ்சுகிறது.
இது வாழ்க்கையல்ல. ஒரு கணக்குப் பாடம். நாம் பார்வையாளர்கள் அல்ல—சும்மா ஆட வந்தவர்கள். கண்ணுக்குத் தெரியாத கைகள் நூலைக் இழுக்கின்றன. நம் உழைப்பால் கட்டப்பட்ட பால்கனிகளிலிருந்து, பணக்காரர்கள் கைதட்டி ரசிக்கிறார்கள்.
நாமோ? இயக்கத்தை மிஸ்டேக் செய்து நோக்கம் என்கிறோம். நோக்கத்தை மிஸ்டேக் செய்து மிஷன் என்கிறோம். அறியாமைதான்.
போதும்.
பெருக்கத்தை மரபு என்று சொல்வதை விடுங்கள். கீழ்ப்படிதலை நோக்கம் என்று சொல்வதை விடுங்கள். இந்த சிஸ்டத்தைக் கோபத்துடன் திட்ட வேண்டாம்— சும்மா ஆடுவதற்கு மறுத்துவிடுங்கள், அவ்வளவுதான்.
லூப்புக்குத் தீனி போட வாரிசுகள் இல்லை. சடங்குக்கு எரிபொருள் போடக் குற்ற உணர்ச்சி இல்லை. மரபுச் சொத்தால் அல்ல, நம்ம இஷ்டப்படி வாழும் வாழ்க்கை.
சடங்கு, ஆம். ஆனால், அது நியாயமானதல்ல. வெறும் கொடுமை.
ஒரு லெகசி (Legacy) விட்டுச் செல்ல வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால், ஒருவேளை இந்தக் காலத்தில், மிக உண்மையான லெகசி— பின்னால் பார்க்காமல்— வெளியேறக் கற்றுக்கொள்வதே.
தங்கம் பூட்டப்பட்டுக் கிடப்பதுபோல— வாழ்க்கையும் லூப்களில் பூட்டப்படலாம்.
சுதந்திரம் என்பது மின்னும் விஷயம் அல்ல. சுதந்திரம் என்பது கட்டளைக்கு ஒளிர மறுப்பது.
No comments:
Post a Comment